யாழ். காரைநகர் பிரதேச செயலரின் தொலைபேசியைத் திருடியதாக கூறப்படும் நபரை யாழ். பொலிஸார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளனர் யாழ். நகரப்பகுதியில் வைத்து இன்று செவ்வாய்கிழமை காலை காரைநகர் பிரதேச செயலரின் கைப்பையில் இருந்த சுமார் 66 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.
அதையடுத்து இலங்கை தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வலையமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு அந்த தொலைபேசி எமி(IME) இலக்கத்தை வைத்து, குறித்த நபரை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
அந்நபர் மேற்படி தொலைபேசி இலக்கத்திற்கு தொலைத் தொடர்பு நிலையத்தில் பணம் மீள்நிரப்பல் செய்வதுள்ளார். இந்த தகவலைக் கேள்வியுள்ள யாழ்.பொலிஸார் குறித்த நபரை கைபேசியுடன் கைது செய்து யாழ்.நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
குறித்த நபரை 10000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ததுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை மன்றில் தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேற்படி செல்லிடத் தொலைபேசி உரிய தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.