புங்குடுதீவு மாணவி வித்தியா படுகெலைச் சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நீதவான் எஸ்.லெனின்குமார் சந்தேக நபர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய வழக்க விசாரணையின் போது, சந்தேக நபர்களின் மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.
கொலையுடன் பலர் தொடர்புபட்டிருப்பதால் மரபணுக்கள் மிகவும் நுணுக்கமாக பரிசோதிக்கப்படுவதனால் இன்றைய தினமும் அதன் அறிக்கை சமர்ப்பிக்க முடியாமல் போனது.
இந்நிலையில், வழக்கினை எதிர்வரும் 15 திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அதுவரையில் 9 சந்தேக நபர்களையும் விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.