Ad Widget

காணிகளை மீள வழங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – சுரேஸ்

வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மீள வழங்குவது தொடர்பில், எந்தவித நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்.பொது நூலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற காணி தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள காணிகள் கூட கடந்த அரசாங்கம் வழங்குவதற்கு சம்மதித்திருந்த காணிகளே தவிர, புதிதாக ஒன்றையும் கொடுக்கவில்லையென அவர்
குறிப்பிட்டார்.

அத்துடன், வடக்கில் இராணுவ மயமாக்கலினூடாக சிங்கள மயமாக்கல் செயற்பாடே இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், நாட்டை தனி பௌத்த சிங்கள நாடாக மாற்றும் வகையில் இராணுவமும் கடற்படையும் செல்லும் இடமெல்லாம் பௌத்த விஹாரையை ஸ்தாபித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும்,தமிழ் மக்களின் காணிகள் விட்டுக்கொடுக்கப்பட்டு வந்தால், அது தமிழினத்தின் அழிவுக்கு வழிகோலும் எனவும்,தமிழ்த் தலைமைகள் வெறுமனே பேசிக்கொண்டிருக்காது இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, காணி சுவீகரிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts