யாழ்ப்பாணத்துக்கு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.
1 கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகளில் கறிமிளகாய் 1 கிலோகிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 1 பிடி கீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதும், கீரையை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
கத்தரிக்காய் 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், பயிற்றங்காய் 1 கிலோகிராம் 240 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 160 ரூபாய்க்கும், வெண்டி 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், கரட் 1 கிலோகிராம் 350 ரூபாய்க்கும், போஞ்சி 1 கிலோகிராம் 260 ரூபாய்க்கும், புடலங்காய் 1 கிலோகிராம் 150 ரூபாய்க்கும், கருணைக்கிழங்கு 1 கிலேகிராம் 120 ரூபாய்க்கும், லீட்ஸ் 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், பூசணி 1 கிலோகிராம் 50 ரூபாய்க்கும், வாழைக்காய் 1 கிலோகிராம் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
சின்ன வெங்காய் 1 கிலோகிராம் 140 ரூபாய்க்கும், பொன்னாங்காணி 1 பிடி 30 ரூபாய்க்கும், வல்லாரை 1 பிடி 20 ரூபாய்க்கும், தேசிக்காய் 1 கிலோகிராம் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
அண்மைய நாட்களில் அதிகளவான மழை பெய்தமையால் மரக்கறிகளின் உற்பத்தி குறைவடைந்தது. இதனால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தம்புள்ளயிலிருந்து கொண்டு வரப்படும் மரக்கறிகளும் உச்சவிலையிலேயே காணப்படுவதால் மரக்கறிகளின் விலையானது உயர்ந்துகொண்டு செல்வதாக திருநெல்வேலிச் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.