2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில், 11 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் வர்த்தமானி அறிவிப்பில், ஏழு பொருட்களின் பெயர் விவரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வரவு- செலவுத்திட்ட அறிக்கையின் பிரகாரம், பருப்பு, சமையல் எரிவாயு, நெத்தலி, கடலை, உருளைக்கிழங்கு, கட்டாக் கருவாடு, சாலயா கடுவாடு, உள்ளூர் பால்மா, டின் மீன், குழந்தைகளுக்கான பால்மா, கிழங்கு, வெங்காயம் மற்றும் பொருட்களுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், டின் மீன், குழந்தைகளுக்கான பால்மா, கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகிய பொருட்களின் பெயர்கள் இந்த வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.