யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவைகள் ரயில் வருவதற்காக மூடப்படும் போது, ரயில் கடவையானது எப்போது திறக்கப்படும் என்ற அவசரத்தில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் வீதியை முழுமையாக ஆக்கிரமித்து நிற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இரட்டை வீதிகள் என்பது இல்லாமல், இருவழிக்கு ஒரே வீதியில் நடுவில் வெள்ளைக் கோடு அடிக்கப்பட்டு, போய் வருவதற்கு வீதி பிரிக்கப்பட்டு இருக்கும். ரயில் கடவையில் கடவை மூடப்படும் போது, கடவை திறக்க உடனடியாகச் செல்ல வேண்டும் என்பதற்காக எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், வெள்ளைக்கோட்டை தாண்டி போய் காத்திருக்கின்றனர்.
கடவை திறந்ததும், அங்கிருந்தும் வாகனங்கள் வரமுடியாமல், இங்கிருந்தும் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அது சீராவதற்கு கடவை போடப்பட்டிருக்கும் நேரத்தைவிட அதிக நேரம் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த எடுக்கின்றது. இதனை மக்கள் புரிந்துகொண்டு செயற்படவேண்டும் என கடவையில் பணிபுரிபவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.