இலங்கையின் வடபகுதியில் இடம்பெறுகின்ற மிகப்பிரசித்தமான வர்த்தக சந்தையான யாழ் சர்வதேச வர்த்தகக் சந்தை (JITF 2016) எதிர்வரும் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு தகுந்த சர்வதேச சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலும் தென்பகுதி முதலீட்டாளர்களை வடபகுதிக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்கிலும் இவ் வர்த்தக சந்தையானது ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்றது.
அவ்வகையில் கடந்த வருடம் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற யாழ்.சர்வதேச வர்த்தக சந்தையானது சுமார் 60,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை வசீகரித்திருந்தது. முதலீட்டாளர்களையும் பார்வையாளர்களையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கும் பரந்த நோக்கத்தினை அடிப்படையாக கொண்டதொரு வர்த்தக சந்தையாக இது விளங்குகின்றது.
கைத்தொழில், விருந்தோம்பல், உணவு குடிபானம், தகவல் தொழில்நுட்பம், நிதித்துறை, ஆடைக்கைத்தொழில், விவசாயத்துறை எனப்பல துறைகளை அடக்கியதாக இவ் வர்த்தக சந்தை விளங்கும்.