ராகம ரயில் நிலையத்தில் வைத்து ரயில் சாரதியொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து 18 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
ராகம ரயில் நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் சாரதிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்த போராட்டம் காரணமாகவே இந்த ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.