Ad Widget

காதல் பிரச்சனைகளை தீர்க்கும் ஃபேஸ்புக்..!!

இண்டந்நெட் மூலம் உலக வாசிகளை மிகவும் எளிமையாக இணைத்த பெருமை கொண்ட சமூக வலைதளமாக ஃபேஸ்புக் இருக்கின்றது என்றே கூறலாம்.

facebook-1

தகவல் பறிமாற்றத்திற்கு வழி செய்வதில் துவங்கி இணையவாசிகளுக்கு இன்று பல்வேறு அற்புத சேவைகளை ஃபேஸ்புக் வழங்கி வருகின்றது. மக்கள் நலன் சார்ந்த பல்வேறு சேவைகளில் துவங்கி இன்றைய இளைஞர்களை குளிர வைக்கும் புதிய சேவையை ஃபேஸ்புக் தற்சமயம் சோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

காதலர்களுக்கு பேருதவியாக இருக்கும் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி காதலித்து பாதியில் தங்கள் காதலை முறித்து கொள்வோருக்கு பயன் தரும் சில சேவைகளை அந்நிறுவனம் சோதனை செய்து வருகின்றதாக தெரிவித்துள்ளது.

இதனால் காதல் முறிந்தவுடன் தங்களது காதலர்களை யாரும் அன்ஃப்ரென்டு, ப்ளாக் போன்ற செயல்களில் ஈடுப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை மாற்றும் போது சீ லெஸ் (see less) எனும் புதிய ஆப்ஷன் காண்பிக்கப்படும். இதை செயல்படுத்திய பின் குறிப்பிட்ட நபரின் புகைப்படம், வீடியோ மற்றும் போஸ்ட்களில் மாற்றங்களை செய்ய முடியும்.

இதன் மூலம் காதலை முறித்து கொண்ட இருவருக்கும் சமமான பயன்பாடுகளை ஃபேஸ்புக் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீ லெஸ் எனும் புதிய ஆப்ஷன் மூலம் குறிப்பிட்ட நபரின் போஸ்ட்கள் கனிசமாக குறைக்கப்படுவதோடு புகைப்படங்களை டேக் செய்யும் போதும் பரிந்துரைகளில் இருந்து குறிப்பிட்ட நபர் நீக்கப்படுகிறார்.

சீ லெஸ் ஆப்ஷனில் தேர்வு செய்யப்பட்ட நபரின் போஸ்ட்களை குறைப்பதோடு அவர்கள் உங்களது எந்தெந்த போஸ்ட்களை பார்க்க வேண்டும் என்பனவற்றையும் தேர்ந்தெடுக்க முடியும் என்கின்றது ஃபேஸ்புக்.

ப்ரைவசி செட்டிங்ஸ் மூலம் குறிப்பிட்ட நபரை உங்களது போஸ்ட்களை பார்க்க விடாமல் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் குறிப்பாக நீங்கள் உங்களது காதலரை டேக் செய்தால் மட்டுமே அவர்களால் உங்களது போஸ்ட்களை பார்க்க முடியும்.

Related Posts