சந்திரனை சுற்றி வளையங்கள் : புயலுடன் கடும் மழை வரும் அபாயம்!!

சந்திரனை சுற்றி பல வர்ணங்களுடன் வெளிச்சமான வளையங்கள் தோற்றுவதன் ஊடாக எதிர்வரும் நாட்களில் புயலுடன் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் தோன்றும் என நட்சத்திர உயிரியல் விஞ்ஞான ஆய்வு நிபுணர் கீர்த்தி விக்கிரமரத்ன எதிர்வு கூறப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வானவில்லைப் போன்று சந்திரனைச் சுற்றி தோன்றியிருந்த வளையங்களை கடந்த சில நாட்களாக இரவு வானில் அவதானிக்க கூடியதாக இருந்தது. பெரும்பாலான பிரதேசங்களில் இரவு 7 மற்றும் 10 மணியளவில் அவை தெளிவாக தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், நட்சத்திர உயிரியல் விஞ்ஞான ஆய்வு நிபுணர் கீர்த்தி விக்கிரமரத்ன, வாயு மண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரிக்கும் தருணங்களில் இந்த நிலை தோன்றும் என குறிப்பிட்டார்.

Related Posts