எதிர்வரும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ம் திகதி முதல் இலங்கையில் சிற்றுண்டிசாலைகளில் விற்பனை செய்யப்படும் அப்பம், பிளேன் ரீ,பால்ரீ உட்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சம்மேளன தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி பிளேன் ரீ விலை 5ரூபாவாலும், பால்ரீ 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.
அப்பம் 5ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. பகல் சாப்பாடு பார்சல் ஒன்று 10ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.
கறுப்புச் சந்தை நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டுப்படுத்துமாக இருந்தால் நுகர்வோருக்கு மீண்டும் விலைச்சலுகைகள் வழங்க தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.