சம்பந்தனின் தோளில் தட்டி விடைபெற்ற மஹிந்த

தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் ஆண்­டிற்­கான வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டது. இதன் போது முன்னாள் ஜனா­தி­ப­தியும் குருணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ச மாலை 4.55 மணி­ய­ளவில் சபைக்கு வந்தார்.

நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது வரவு – செலவு திட்­டத்தை 2.00 மணிக்கு ஆரம்­பித்து உரை­யாற்றிக் கொண்­டி­ருக்­கையில் சுமார் இரண்டு மணித்­தி­யா­லங்கள் 45 நிமி­டங்கள் கழிந்த நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி சபைக்கு சமு­க­ம­ளித்தார்.

முன்­னைய ஆட்­சியில் நிதி­ய­மைச்சர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவே வரவு செலவு திட்­டத்தை சபையில் முன்­வைத்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அமர்ந்­தி­ருந்த சபையின் முன் வரி­சையில் பவித்ரா வன்­னி­யா­ராச்சி எம்.பி. மட்டும் அமர்ந்­தி­ருந்தார். இதன்­போது பவித்ரா வன்­னி­யா­ராச்சி எம்.பி மற்றும் தினேஷ் குண­வர்­தன எம்.பி.யும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யிடம் உரை­யா­டினர்.

கல்­விக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி தொடர்பில் உரையில் நிதி அமைச்சர் குறிப்­பி­டு­கையில் எதிர்­கட்­சி­யினர் கேள்­வி­களை எழுப்­பினர்.இதன் போது நிதி­ய­மைச்சர் “உங்கள் ஆட்­சியில் செய்­யா­ததை நாம் செய்­கிறோம்” என்றார்.

முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் அமைச்­சர்­க­ளான ஜோன் அம­ர­துங்­கவும், லக்ஷ்மன் கிரி­யெல்­லவும் முன்­வ­ரி­சையில் இருந்­த­வாறு புன்­ன­கைத்துக் கொண்­டி­ருந்­தார்கள். முன்னாள் ஜனா­தி­ப­தியும் கையை அசைத்து எதையோ தெரி­வித்தார்.

மாலை 5.25 மணி­ய­ளவில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சபையை விட்டு வெளி­யே­றினார். இவ்­வாறு வெளியேறும் போது தனது அரு­காமை ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்த எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் தோலில் லேசாகத் தட்டிவிட்டு வெளியேறினார்.

இதன் போது எதிர்தரப்பில் சிலர் எழுந்து நின்று முன்னாள் ஜனாதிபதிக்கு கௌரவிம் செலுத்தினர்.

Related Posts