அலங்கோலமான பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு அலங்கரித்து விட்டதைப் போன்று வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் அமைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டம் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எதுவித சலுகைகளும் வழங்கப்படவில்லை.
அத்துடன் நெல் மற்றும் றப்பர் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவித நிவாரணங்களும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.
சுருக்கமாக சொல்வதானால், இந்த வரவு செலவுத்திட்டம் அலங்கோலமான பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு அலங்கரித்து விட்டதைப் போன்றது என்றும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.