வடக்கில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற காரணத்தினால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் புகுந்து ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், பொது இடங்களிலும், நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
குறிப்பாக பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள், வயதானோர் என அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் சமைத்த உணவுகளையும் உடனடியாக வழங்கி வரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினராகிய அங்கஜன் ராமநாதன், இது கூறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க நான் எனது சொந்தப் பணத்தினையும் அரச உதவிகளையும் பெற்றாலும் மக்களின் தேவை அதிகமாகவே காணப்படுகின்றது. ஆதலால் தான் உங்களிடமும் கரம் நீட்டி நிற்கிறேன்.
உங்களால்லான ஆடைகள், உலர் உணவுப் பொதிகள், சவர்க்காரங்கள், போர்வைகள், நிலவிரிப்புக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் என அனைத்தையும் சிரமம் பாராமல் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் எமக்கு அளிக்கும் பொருட்களை கோயில் வீதியில் (Temple Road) இல் உள்ள எனது அலுவலகத்தில் பதிவு செய்து ஒப்படையுங்கள். இது தவிர பொருட்களை ஒப்படைக்க வேறு நிலையங்கள் எதுவும் என்னால் ஏற்படுத்தப்படவில்லை என்பதுடன், மேலதிக தவல்களுக்கு 0766 972 777 எனும் இலக்கத்துடன் மாத்திரம் தொடர்பினை ஏற்படுத்துங்கள். பொருட்கள் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்படும். பண உதவிகள் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது.
பொருட்கள் ஒப்படைக்கும் முகவரி: 80 A, Temple Road Nallur
தொலைபேசி இலக்கம்: 0766 972 777