என்னை கட்சியிலிருந்து நீக்கப்போவதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு தக்க பதில் வழங்க தான் தயாராகிக்கொண்டு உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற போது அங்குள்ள வானொலி ஒன்றிற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சித் தலைமையிடம் கோரியுள்ளதாகவும், முதலமைச்சர் முன்னாள் நீதியரசராக இருந்தாலும் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்படத்தான் வேண்டும்.
எனவும் பேட்டியொன்றினை அளித்திருந்தார். இது தொடர்பில் நேற்றைய தினம் வடக்கு முதலமைச்சரின் வாசல் தலத்தில் அவரை சந்தித்த ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். யாரும் எதுவும் கூறுவார்கள் அதைப்பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ள முடியாது.
[otw_shortcode_quote border_style=”bordered” background_color_class=”otw-pink-background”]சுமந்திரனின் அனைத்து கேள்விகளுக்கான பதிலை அவருக்கு நான் வழங்க, பதில்களை தயாரித்து கொண்டுள்ளேன். ஆகையால் சரியான நேரத்தில் அந்த பதில்களை வெளியிடுவேன். என்னை பற்றி பலர் பலவிதமாக கூறமுடியும், ஒருவர் எனது தாடி சரியில்லை, மற்றொருவர் அது சரியில்லை இது சரியில்லை என்றெல்லாம் கூற முடியும். அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. [/otw_shortcode_quote]
இருந்த போதிலும் சுமந்திரனின் அனைத்து கேள்விகளுக்கான பதிலை அவருக்கு நான் வழங்க, பதில்களை தயாரித்து கொண்டுள்ளேன். ஆகையால் சரியான நேரத்தில் அந்த பதில்களை வெளியிடுவேன். என்னை பற்றி பலர் பலவிதமாக கூறமுடியும், ஒருவர் எனது தாடி சரியில்லை, மற்றொருவர் அது சரியில்லை இது சரியில்லை என்றெல்லாம் கூற முடியும். அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் அதனை தற்போது அப்படியே விட்டு விடுவோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை முதலமைச்சருக்கும், சுமந்திரனுக்கும் இடையில் நிலவி வந்த பனிப்போர் இன்று முதலமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாகவே பதிலளித்ததன் மூலம் உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்மோதல் கட்சியில் பல திருப்பங்களை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.