நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு தன்னால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனக்குள்ள அதிகாரங்களை கைவிட்டு ஜனநாயக சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவது இன்றியமையாத ஒன்று எனத் தெரிவித்தார்.
மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சேபித தேரர் பாடுபட்ட நியாயமான சமுதாயத்தை உருவாக்க, முடிந்தளவு நடவடிக்கைகளை மேற்கொள்வது அன்னாருக்கு செய்யும் மிகப்பெரிய உபகாரம் மற்றும் கௌரவம் எனத் தெரிவித்தார்.
சோபித தேரர் எதிர்பார்த்தது போன்று இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் நியாயமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.