யாழில் முதல்தடவையாக மாணவர் பாராளுமன்றம்

யாழில் முதற்தடவையாக பாடசலைகளில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்தடவையாக இயங்கவுள்ள மாணவர் பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தல் நேற்று [11] யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

எதிர்காலத்தில் மாணவர்களிற்கிடையே வன்முறையற்ற, ஜனநாயக முறையில் பிரச்சனைகளை அணுகுவதை ஊக்குவிப்பதை நோக்காக கொண்டு இந்த செயற்திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றிற்கான தேர்தலில் 180 மாணவர்கள் போட்டியிடுகின்றனர் அவர்களில் 120 மாணவர்கள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இந்த பாராளுமன்றத்தில் பிரதமர் சபாநாயகர் மற்றும் அமைச்சர்களும் அங்கம்வகிக்கவுள்ளதாக இத்தேர்தலில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள யாழ் வலய கல்விப்பணிப்பாளர் நடராஜா தெய்வேந்திரராஜா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மாணவர்கள் தமது பிரச்சனைகள் மறறும் தேவைகள் தொடர்பில் உரியவர்களிடம் தெரிவித்து அவற்றை நிவர்த்தி செய்ய இந்த மாணவர் பாராளுமன்றம் வளிவகுப்பதுடன் எந்தவொரு விடயத்தையும் ஜனநாயக முறையில் அணுகவும் மாணவர்கள் இதன்மூலம் அறிந்து ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ் இந்து மகளிர் பாடசலையை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளிலும் இத்தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

Related Posts