சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று

கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி நிகழ்வுகள் இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளன.

இன்றைய தினம் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி வரை அன்னாரின் பூதவுடலுக்கு பொது மக்கள அஞ்சலி செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற இருப்பதனால் கொழும்பு மற்றும் கோட்டையை அண்மித்த பகுதிகளில் விஷேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related Posts