தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாவாக அதிகரிக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உரையாற்றும்போது,
மதுபானங்களுக்கு விதிக்கும் வரிகளினால் கணிசமான அளவு வருமானம் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.
சுற்றிவளைப்புக்கள் மேற்கொண்டதன் காரணமாக இந்த வருமானம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.