கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) பாடநெறி பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தும், இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை என்று அகில இலங்கை மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவிக்கின்றார்.
அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி பல நாட்கள் கடந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.
அந்தக் குழு மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் இந்த விடயம் தெளிவாகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.