டி.எம் சுவாமிநாதன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக நியமனம்

Swaminathanஅமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியினை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்களானது, அமைச்சர் சகலா ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சகலா ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மதம் மத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன்இ சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவற்றில் சகலா ரத்னாயக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர் மற்றும் மாத்தரை மாவட்டத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. டி.எம் சுவாமிநாதன் தேசிய பட்டியலின் ஊடாக நியமிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Posts