யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று வீசி வருவதால், தீவகம் கல்வி வலயத்துக்குட்பட்ட வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை (09) காலை 10 மணியுடன் இடைநிறுத்தப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடும் காற்றுக்காரணமாக பாடசாலையின் கூரைகள் தூக்கி எறியப்படும் நிலையில் இருந்தமையால் மாணவர்களால் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடிவில்லை என்றும் இதனாலேயே பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாடசாலை கடற்கரைக்கு அண்மையில் அமைந்துள்ளமையால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலையை மூடி மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு பாடசாலை அதிபருக்கு அறிவுறுத்தியதாக தீவகக் கல்வி வலய தகவல்கள் தெரிவிக்கின்றன.