பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் உடல் பாகங்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தாஜூடீனின் சடலத்தின் சில பாகங்களைக் காணவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வசீம் தாஜூடீனின் சடலம் அண்மையில் மீள தோண்டி எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலாவது பிரேதப் பரிசோதனையின் போது இந்த உடல் பாகங்கள் காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மரணம் பற்றிய உண்மையான விபரங்கள் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தினால் இவ்வாறு உடல் பாகங்கள் காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தாஜூடீன் கொலையை மேற்கொண்ட நபர் யாழ்ப்பாணப் பகுதியில் ஒளிந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தின் கப்டன் நிலை பதவியொன்றை வகித்து வரும் நபரே இவ்வாறு கொலை செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த நபர் வடக்கு பிராந்திய முகாம் ஒன்றில் கடமையாற்றி வருவதாகவும், விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.