வடமாகாண உதவி கலால் அதிகாரியான கிரிஸ்ட் ஜோசப், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
10,000 பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 60 ஆயிரம் ரூபாயை இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இன்று 6ஆம் திகதி வரை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.