செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி டேப்ஸ் தற்போது வெளிவந்துள்ளன.நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி எடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனினும், நாம் அதிகளவில் செல்பி எடுப்பதை நிறுத்துவதாக இல்லை.
இந்நிலையில், இங்கிலாந்தில் செல்பி மோகத்தைப் போக்கும் ஆன்டி-செல்பி டேப்ஸ் என்ற பெயரில் (மிண்ட்ஸ்- புதினா வாசனையுடன் கூடிய இனிப்பு) விற்பனைக்கு வந்துள்ளன.
ஆண்களுக்கு 1 மாத்திரை, பெண்களுக்கு 5 மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.