நயினாதீவில் முன்னொரு காலத்தில் இருந்த ரஜமகா விகாரை வளாகத்தில் மீண்டும் விகாரை அமைக்கப்பட்டு, கலசங்கள் மற்றும் ஆசனங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
நயினாதீவில், நாக விகாரை என்னும் விகாரையொன்று துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த விகாரைக்கு சான்றாக அமையும் பழைய விகாரையானது, நயினாதீவு 1ஆம் வட்டாரத்தில் அமையப்பெற்றிருந்தது.
இந்நிலையில் பழைய இடத்திலும் ஒரு விகாரையை அமைக்கும் வகையிலான நிகழ்வுகள், கடந்த செவ்வாய்க்கிழமை (03) மற்றும் புதன்கிழமை (04) நடைபெற்றன.
நயினாதீவின் நாகவிகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வங்களாவடி துறைமுகத்தை வந்தடைந்த கலசங்கள் மற்றும் ஆசனங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பழைய விகாரை அமையப் பெற்றிருந்த இடத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று திறப்பு விழா நடைபெற்றது.
முதல் நாள் இந்நிகழ்வில் நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ கலந்துகொண்டார்.