அரசாங்க தொழிலில் இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லையை 10 வருடத்தால் அதிகரிக்க அனுமதி பெறுவதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அண்மையில் ‘கஜசவ் மித்துரோ” அமைப்பின் ஏற்பாட்டில் மதுகம சிபிகே மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்துதெரிவிக்கையில், அரச சேவையில் இணைத்துகொள்வதற்கான வயதெல்லை 30- 45 வரையாகும். வயது பிரச்சினையின் காரணமாக சிலரை அரச சேவையில் இணைத்துகொள்ள முடியாதுள்ளது. இதனால் பலர் வெறுப்படைந்துள்ளனர். மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானங்கள் எடுப்பது அவசியம். இதற்கு அரசியல் புரிந்துணர்வு அவசியம்.
பிதரமருடன் இது தொடர்பில் கதைக்க முடியும். கட்சியை மீட்டெடுக்கக்கூடியவர்கள் இல்லாவிடின் அக்கட்சி பாதிக்கப்படும். அதனால் எதிரியை பழிவாங்க வேறு நபர்களுக்கு வாக்குகள் வழங்குவர். ஒரு நபரினால் கட்சியே பாதிக்கப்படும்.பணம் இருக்கும் நபருக்கு கௌரவத்தை பெற்றுகொடுப்பதுதான் தொழில். தகைமைகள் இல்லாத தொழிலும் இதுதான். லஞ்சம் கொடுத்தாவது அரசியல்வாதியாக முடியும்.
இதனால் கட்சிக்கு பதிலாக மக்கள் பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். சிலர் பதவிக்காக வேலை செய்கின்றனர். வேறு சிலர் நாட்டுக்காக பணியாற்றுகின்றனர். நான் நாட்டுக்காக சேவை செய்யும் குழுவில் உள்ளேன். இதுவரை 5000 தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளேன். களுத்துறை மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன். ஜனவரி 8ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை நாம் பாதுகாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.