ஏ.ஆர்.ரகுமான் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான். பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இருக்கும் ரகுமான் மிக அரிதாகத்தான் மற்றவர்களின் புகைப்படங்களையோ வீடியோக்களையோ பகிர்ந்துக்கொள்கிறார்.
அப்படிபட்ட ரகுமான் ஒரு வீடியோவை பகிர்ந்துகொண்டார் என்றால் அதன் முக்கியத்துவத்தை சொல்லி தெரியவேண்டியது இல்லை. வாழ்க்கை மீது புகார் சொல்பவர்களுக்கானது இந்த வீடியோ என்று ரகுமான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் ரகுமானை 21 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகுமான் பகிர்ந்துள்ள வீடியோவில், தனது கைகளில் முக்கால்வாசியை இழந்த இளைஞர் ஒருவர், பியானோவில் அட்டகாசமான ஒரு இசையை வாசிக்கிறார்.