விஜய்க்கு தந்தையாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்

பிரபல இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ‘டூரிங் டாக்கீஸ்’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார். நீண்ட நாட்களாக படங்களை இயக்காமல் இருந்த இவர் தற்போது தந்தை கதாபாத்திரத்திற்கு நடிக்க தயாராகி வருகிறார்.

sv-santhera-sekar

துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில், தனுஷுக்கு தந்தையாக நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுதவிர, பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்திலும் எஸ்.ஏ.சந்திரசேகர் தந்தையாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

70 வயதான ஒருவரின் கோபத்தைப் பற்றிய கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்ரம் விஜய் இயக்கவுள்ளார். இதில் பா.விஜய் கதாநாயகனாகவும், சாந்தினி கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘நையப்புடை’ என தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

Related Posts