மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ஷாம்லி. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘வீரசிவாஜி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ஷாம்லி, விஜய்யின் தீவிர ரசிகையாக நடிக்கிறாராம். தமிழ் சினிமாவில் சகபோட்டியாளர்களாக கருதப்படும் அஜித்-விஜய் பொது வாழ்வில் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இப்போது, அஜித் குடும்பத்தில் உள்ள ஒருவர் விஜய்யின் தீவிர ரசிகையாக நடிப்பது அவர்களது உண்மையான நட்புக்கு மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம்.
‘வீரசிவாஜி’ படத்தை கணேஷ் விநாயக் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு டாக்சி டிரைவராகவும், ஜான் விஜய் வில்லனாகவும், ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.