51 பெண் பிள்ளைகள் சாவிற்கும், தன்னார்வத் தொண்டு நிறுவன 17 ஊழியர்கள் கொலைச் சம்பவத்திற்கும் விடுதலைப்புலிகளே காரணம்

வடமாகாண நட்டலமொத்தன் குளத்தில் நடந்த 51 பாடசாலை பெண் பிள்ளைகள் சாவிற்கும் மூதூரில் பிரஞ்சு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்த 17 ஊழியர்கள் கொலைச் சம்பவத்திற்கும் விடுதலைப்புலிகளே காரணம் என விசாரணை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

உடலகம ஆணைக்குழு 2005 ஓகஸ்டிற்கும் நவம்பர் 2006 ஆம் ஆண்டிற்கும் இடையில் இடம்பெற்ற 16 மனித உரிமை மீறல்கள் சம்பவம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆணைக்குழு 7 சம்பவங்கள் சம்பந்தமாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு 7 சம்பவங்கள் சம்பந்தமாக ஏப்ரல் – மே 2009,இல் சமர்ப்பித்தது.

மீதியுள்ள 9 சம்பவங்கள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் (ஓகஸ்ட் 2005 ), நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்(டிசம்பர்2005) மற்றும் நடராஜா ரவிராஜ் (நவம்பர்2006) ஆகும்.

பெண் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட கொலைகள் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட்மாதம் நடைபெற்றது.

இது சம்பந்தமாக இந்த ஆணைக்குழு . என்.கே. உடலகம தலைமையில் 8 அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது.

அது தனது அறிக்கையில் 17-19 வயதுக்குட்பட்ட இந்தப் பெண் பிள்ளைகளை தொலைவிலுள்ள ஒரு தனியான முகாமிற்கு அழைத்துச் சென்றது விடுதலைப்புலிகளே.அதனால் ஆகாயத்திலிருந்து வந்த குண்டுத் தாக்குதலுக்கு அவர்கள் ஆளாக வேண்டியிருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு தனது அறிக்கையில் இலங்கை விமானப்படையின் தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளது.அந்தத் தாக்குதலில் எவ்வித மனித உரிமை மீறல்களும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் விமானப்படை நடாத்திய தாக்குதல் சரியான ஒரு இராணுவ நிலையாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூதூர் கொலை சம்பந்தமாக குறிப்பிடுகையில், இந்தக் கொலை நடப்பதற்கு தமிழீவிடுதலைப்புலிகள்தான் பொறுப்பாக வேண்டும்.மூதூரில் மொத்தம் 16 தமிழர்களும் 1 முஸ்லீமும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இது பாதுகாப்புப் படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற உச்சக்கட்ட போராட்டத்தின் விளைவாகும்.

மேலும் மீதி 4 விடயங்கள் சம்பந்தமாகக் குறிப்பிடுகையில், ஒக்டோபர் 2006 ஆம் ஆண்டு சிகிரியா விற்கு அருகாமையில் 98 அரச கடற்படை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதற்கும் இந்தவிசாரணை ஆணைக்குழு நேரடியாகவோ மறைமுகமாகவோ இராணுவம் தான் முழுப் பொறுப்பு எனக் கூறியுள்ளது.

ஜனவரி 2006ஆம் ஆண்டு நடைபெற்ற 5 இளைஞர்களின் கொலை சம்பந்தமாக விடுதலைப்புலிகளே காரணமாக இருக்கின்றனர்.

இவ்வாறு செய்வதால் அரச படையினர் மீது குற்றம் சுமத்தலாம் என்பதற்காக செய்திருக்கலாம் எனத் தெரிய வருகின்றது.

Related Posts