கொண்டையா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொடதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் கைதாகி இருந்தார்.
குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கொண்டைய்யா அந்த வழக்கில் இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டார்.
எனினும் அவர் மீதுள்ள வேறு சில குற்றங்களுக்காக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கம்பஹா நீதவான் நீதிமன்றினால் கொண்டைய்யா நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சந்தேக நபரான கொண்டயா நேற்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை கம்பஹா பிரதான நீதவான் டிகிரி. கே. ஜயதிலக அவரை பிணையில் விடுதலை செய்ததாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.