தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த பெண்ணுக்கு பிணை இல்லை!

தனது வயோதிபத் தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 42 வயதான பெண் எதிர்வரும் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கண்டி – பலகோல்ல பகுதியிலுள்ள சொகுசு வீடொன்றில் வேறாக கட்டப்பட்டிருந்த கூட்டில் இருந்து வயோதிபர் ஒருவர் பலகோல்ல பொலிஸாரால் அண்மையில் மீட்கப்பட்டார்.

பின்னர் குறித்த வயோதிபர் அந்த வீட்டு உரிமையாளரின் 72 வயதான தந்தை எனத் தெரியவந்தது.

இதனையடுத்து கைதான அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேளை, அவர் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறியதோடு, அவரை பிணையில் விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

விடயங்களை ஆராய்ந்த கண்டி மேலதிக நீதவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Posts