வடமாகாணத்தில் பாற்பசு, ஆடு, கோழி ஆகிய கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில் மாவட்ட ரீதியாக சிறந்த பண்ணையாளர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிகள் இடம்பெற்று அவர்கள் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதற்கான நிகழ்வை வடமாகாண விவசாய கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கல் நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் பண்ணையாளர்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை அருகில் உள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பெற்று விண்ணப்பப்படிவத்தினை பூர்த்திசெய்து எதிர்வரும் 30ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னராகவோ தமது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு மாகாணப் பணிப்பாளர் எஸ்.வசீகரன் அறிவித்துள்ளார்.