பல்வேறு தகவல்கள் அடங்கிய வண்ணங்கள் நிறைந்த புகைப்படங்கள் உலா வரும் பேஸ்புக்கில் பார்வையிழந்தோரும் இதில் உள்ள படங்களைப் பற்றி அறியும் விதமாக பிரத்யேக டூலை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் தளத்தில் பார்வையிழந்த என்ஜீனியராக முதன்முதலாக பணிபுரியத் தொடங்கியுள்ள, மேட் கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார். நண்பர்கள், குடும்பத்தினர் என தனக்கு விருப்பமான விஷயங்களை புகைப்படமாக பேஸ்புக்கில் பகிர்வது வழக்கம். இது தொடர்பாக ‘கமெண்ட்’ செய்பவர்களும் அதில் என்னதான் இருக்கின்றது எனப் பெரிதாகப் பேசுவதில்லை.
இந்த செயற்கை நுண்ணறிவு டூலின் மூலம், பேஸ்புக்கில் வெளியிடப்படும் புகைப்படத்தில் உள்ள முக்கிய விவரங்களை பார்வையிழந்தோர் தெரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு இயற்கைக் காட்சி கொண்ட புகைப்படத்தை ‘இயற்கை’, ‘வானம்’ என இது அடையாளப்படுத்தும். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த பிரத்யேக டூல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.