தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் நண்பகலளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளது.
பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு விஜயம் செய்யவுள்ளனர்.
கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விஜயம் செய்யவுள்ளனர்.
அனுராதபுர சிறைச்சாலையில் 35 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.