Ad Widget

மாணவிகளை புகைப்படம் எடுப்பதாக புகார்

கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புகளில் கல்விக்கற்கும் மாணவிகளை பாடசாலைப் பணியாளர் ஒருவர், அலைபேசியில் மறைமுகமாக புகைப்படங்கள் எடுத்து வருவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரம் மற்றும் உயர்தரத்தில் கல்விக்கற்று வரும் மாணவிகள் சிலரை, குறித்த பாடசாலை பணியாளர், மறைமுகமாக புகைப்படம் எடுத்து அதனை, எவ்வாறான தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றார்களோ என அச்சத்துடன் இருப்பதாக மாணவர்கள், பலர் கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்தி குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த வாரம், குறித்த பாடசாலையில் இடைவேளை நேரத்தில் இரண்டு மாணவிகள் உரையாடிக் கொண்;டிருந்தபோது, குறித்த பாடசாலை பணியாளர், பாடசாலைக் கட்டடத்தில் இருந்து அந்த மாணவிகள் இருவரையும் மறைமுறைகமாக புகைப்படங்களை எடுத்துள்ளதாக குறித்த மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பெண்கள், மாணவிகளின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவேற்றிவிட்டு அவர்களுக்;கெதிராக தவறான செய்திகளை வெளியிடும் பல சம்பவங்கள் நாடெங்கும் இடம்பெற்று வரும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் குறித்த மாணவிகளை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மாணவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts