இலங்கையில் தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து நீண்டகாலமாக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வருடங்களினுள் இந்த செயற்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரவும், அதன் பின்னர் இலங்கையிலுள்ள அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்கவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.