பாரா­ளு­மன்­றத்­துக்குள் “காமத் தர­கர்கள்’

மத்­திய வங்கி உத்­தி­யோ­கத்­தர்கள் இட­மாற்றம் தொடர்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்சை நிலை எழுந்­தி­ருந்த போது காமத்­த­ர­கர்கள் சபைக்குள் இருப்­ப­தாக இரு தரப்­பி­லி­ருந்தும் பரஸ்­பரம் கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டன.

பாரா­ளு­மன்­றத்தின் நேற்­றைய அமர்வின் போது மேற்­படி விவ­காரம் தொடர்பில் சர்ச்சை எழுந்­தது. 200க்கு மேற்­பட்ட மத்­திய வங்கி உத்­தி­யோ­கத்­தர்கள் இட­மாற்றம் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் இது பழி­வாங்கல் நட­வ­டிக்­கை­யா­கவே இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன குற்றம் சாட்­டினார்.

தினேஷ் குண­வர்த்­த­னவின் குற்­றச்­சாட்­டுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதி­ல­ளித்துக் கொண்­டி­ருந்த போது முன்னாள் அமைச்­சரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச, வாசு­தேவ நாண­யக்­கார மற்றும் சுதந்­திரக் கட்சி பின் வரிசை உறுப்­பி­னர்கள் பலர் கூச்­ச­லிட்டுக் கொண்­டி­ருந்­தனர்.

இந்த சந்­தர்ப்­பத்தில் பிர­த­மரைப் பார்த்து கூச்­ச­லிட்டுக் கொண்­டி­ருந்த விமல் வீர­வன்ச எம்.பி. காமத்­த­ர­கர்கள் என்று விளித்துக் கூறினார்.

இதனை செவி­ம­டுத்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆமாம் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்­துதான் காமத்­த­ர­கர்கள் இந்த சபைக்குள் நுழைந்­தி­ருக்­கின்­றனர் என்றார்.

சபையில் கூச்சல் குழப்பம் அதி­க­ரித்­த­மையால் விமல் விர­வன்ச எம்.பி.யினால் கூறப்­பட்ட காமத்­த­ரகர் என்ற சொல் பெரி­தாக கேட்­க­வில்லை. என்ற போதிலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் கூறப்­பட்­டது நன்­றா­கவே ஒலி­வாங்­கியில் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து எழுந்த விமல் வீர­வன்ச எம்.பி. பிர­த­மரால் கூறப்­பட்ட வார்த்தை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வெட்­கப்­ப­டுத்தும் வார்த்­தை­யாகும். ஆகவே அதனை அவர் வாபஸ் பெறவேண்டும் என்று சபாநாயகரிடம் முறையிட்டார்.

எனினும் சபாநாயகர் விமல் வீரவன்ச எம்.பி.யின் முறைபாட்டை செவிமடுக்காது சபையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு சென்றார்.

Related Posts