ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாடசாலை அதிபர் ஊடாக குறித்த விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விபரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.