வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு நேரடியாக நிதியுதவி பெற்றுக் கொள்வதற்கான மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள நாளிதழான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
வட மாகாணத்தின் அதிகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய பின்னர், மாகாணத்தின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பாக வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு வேண்டுகோளாகவும் முன்வைத்திருந்தார்.
அத்துடன் குறித்த நிதியுதவிகளை மாகாண சபைக்கு நேரடியாகப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் அவர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் ஒருகட்டமாக ஐக்கிய நாடுகள் சபையிடமும் அவர் இவ்வாறான வேண்டுகோள்களை முன்வைத்திருந்தார்.
எனினும் இலங்கையிலுள்ள ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வேண்டுகோளைப் புநிராகரித்துள்ளார்.
வட மாகாணத்திற்கான அனைத்து நிதியுதவிகளும் மத்திய அரசாங்கத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
என திவயின செய்தி வெளியிட்டுள்ளது