அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பாக பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

வடக்கு மாகாணத்தில் 2012 மார்ச் 30ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பில் எதிர்வரும் 9,10ஆம் திகதிகளில் நேர்முகப்பரீட்சை இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்தல் விடுத்திருக்கின்றமை யாவரும் அறிந்த ஒன்றே.

மேற்படி நேர்முகத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கான அனுமதிக்கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

எனினும் குறித்த 2012 மார்ச் 30ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்து குறித்த பதவிக்கு விண்ணப்பிக்காத பட்டதாரிகள் தங்களுடைய சுயவிவரங்களையும், தங்களையும் மேற்படி நேர்முகத்தேர்வில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்கும் கோரிக்கையையும், “செயலாளர், பொதுநிர்வாக அமைச்சு, சுதந்திர சதுக்கம், கொழும்பு -07” என்கின்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

வேலையற்ற பட்டாதாரிகளின் விவகாரங்களைக் கவனிப்பது தொடர்பில் அமைக்கப்பட்டிருக்கின்ற வடக்கு மாகாணசபையின் விஷேட செயலணி சார்பில் பொதுநிர்வாக அமைச்சு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அமைச்சின் அதிகாரிகளிடம் இருந்து இத்தகவல் வழங்கப்பட்டது, என வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன், மற்றும் அஸ்மின் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Posts