குழந்தைகள்தான் எனக்கு மகிழ்ச்சி – ஹன்சிகா

தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் ஹன்சிகா. அவருக்கு மிகவும் பிடித்தமானது என்ன? மகிழ்ச்சி அளிப்பது எது என்பது குறித்து சொல்கிறார்..

hansika

திரை உலகில் காலடி வைத்த பிறகு அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு பொருத்தமான வேடம் கிடைத்தால் ‘ஈகோ’ பார்க்காமல் நடிப்பேன். ‘அரண்மனை–2’ படத்தில் திரிஷாவுடன் நடிப்பது புதிய அனுபவம். அவர் மிகவும் அன்புடன் பழகுகிறார். சுந்தர்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் வித்தியாசமானது. ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்.

தமிழ் ரசிகர்கள் மனதில் நான் இடம் பிடித்து இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. விதவிதமான வேடங்களில் நடித்து இன்னும் நல்ல பெயர் வாங்க வேண்டும். ரசிகர்களிடம் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும். நல்ல வேடங்களில் நடித்து அதை ரசிகர்கள் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது.

என்றாலும் நான் தத்து எடுத்து வளர்க்கும் 31 குழந்தைகளை பார்க்கும்போது தான் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. மன நிறைவு கிடைக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். இதற்காகவே அடிக்கடி மும்பை சென்று வருகிறேன். குழந்தைகளுடன் இருப்பது எனக்கு தனி இன்பம் என்று கூறுகிறார்.

Related Posts