சீனி, உப்பு,எண்ணெய்க்கான வரிகளை அதிகரிக்க அமைச்சர் ராஜித அரசுக்கு ஆலோசனை

சீனி, உப்பு, எண்ணெய் ஆகி­ய­வற்றின் வரிகள் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். இதன்­மூலம் நாட்டில் இரு­தய நோயா­ளர்­களின் எண்­ணிக்கையை குறைக்க முடியும் என்று சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

மது, சிகரட் பாவ­னையால் நோய்­க­ளுக்கு இலக்­கா­கு­ப­வர்­களின் மருத்­துவ செல­வு­க­ளுக்கு அர­சாங்கம் பல இலட்­சம் ரூபாய்க்களை செலவு செய்ய வேண்­டி­யுள்­ளது என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

கிரு­லப்­ப­னை­யி­லுள்ள அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன இதனைத் தெரி­வித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், நாட்டில் இன்று 70 வீத­மானோர் தொற்றா நோய்­க­ளுக்கு உள்­ளா­கின்றார்.

இதனை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டி­யது கட்­டா­ய­மான தேவை­யாகும்.

வருடா வருடம் அதே­போன்று திடீ­ரென்றும் மது மற்றும் சிக­ரட்­டுக்­க­ளுக்­கான வரிகள் அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இதனை வர­வேற்­கின்றோம்.

மது சிகரட் பாவ­னையால் பெரு­ம­ள­வானோர் நோய்­க­ளுக்கு உள்­ளா­கின்­றனர். இந்த நோய்­களின் சிகிச்­சை­க­ளுக்­­காக அரசு பல இலட்சம் ரூபாய்­களை செலவு செய்ய வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கி­றது.

பணத்தை கொடுத்து மது, சிகரட் பாவ­னையை மேற்­கொண்டு நோயா­ளி­க­ளா­கு­ப­வர்­க­ளுக்கு அரசு பணம் செல­வ­ழித்து சுக­ம­ளிக்க வேண்­டி­யுள்­ளது. இந்­நிலை மாற­வேண்டும்.

இது­போன்று நாட்டில் சீனி, எண்ணெய், உப்பு பாவ­னையால் நீரி­ழிவு நோய், இரத்த அழுத்தம், இரு­தய நோய் என்பன ஏற்­ப­டு­கின்­றன.

இதனை தடுக்க வேண்டும். இல்­லா­விட்டால் இந்­நோ­யா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும். சீனி, உப்பு, எண்ணெய் உட்­கொள்­ளா­ததால் எவரும் உயி­ரி­ழக்க மாட்டார்கள். எனவே நோய்களை ஏற்படுத்தும் இப்பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த யோசனையை நிதியமைச்சருக்கு தெரிவித்துள்ளேன் என்றார்.

Related Posts