சேயா படுகொலை: மாணவனும் குடும்பஸ்தரும் விடுதலை

கம்பஹா, கொட்டதெனியாவ 5 வயது சிறுமியான சேயா சந்தவமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைச்செய்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 17 வயதான மாணவனும், ஒரு குழந்தையின் தந்தையையும் (31) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முதலாவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் DNA மாதிரிகள், பொருந்தவில்லை என்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து அவ்விருவரையும் விடுவிக்குமாறு இரகசிய பொலிஸார் விடுத்த கோரிக்கையை அடுத்தே மினுவாங்கொடை நீதவான் டி.ஏ. ருவன்பத்திரண அவ்விருவரையும் விடுவித்தார்.

Related Posts