சிம்புதேவன் இயக்க்ததில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, விஜய் எவ்வளவு பெரிய நடிகர். அவருக்கு பின்னால் எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம்.
விஜய் மிகப்பெரிய நடிகர் என்றாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். அமைதியாக இருப்பார். அவருடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவார். அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார். எப்போதும் நல்ல சிந்தனையுடன் செயல்படுவார்.
விஜய் மிகவும் நல்லவர். ‘புலி’ படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். நிச்சயம் இது குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய நல்ல படம். பார்ப்பவர்களுக்கு கண்கவர் விருந்தாக இருக்கும். ஸ்ரீதேவியுடன் இந்த படத்தில் நடித்ததும் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவரைப் பார்த்துதான் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களை கவர்வது எப்படி என்பதை கற்றுக் கொண்டேன். அதற்கு ஏற்ப என்னை நான் மாற்றிக் கொண்டேன்.
‘புலி’ படம் எனக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் நல்ல படமாக அமையும். இதற்கான அம்சங்கள் இந்த படத்தில் நிறைய உள்ளன என்றார்.