மக்கா புனித தலத்துக்கு யாத்திரை சென்ற இரு இலங்கை யாத்திரிகர்களைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த அபூபக்கர் அசீஸ் (வயது 58), ரோஷன் அப்துல் அசீஸ் (வயது 55) தம்பதியினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள் இருவரையும் தேடும் பணியை விரைவாக செயற்படுத்தபடுவதாக மக்கா யாத்திரையில் ஈடுபட்டிருந்த அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
தனது பெற்றோரை கண்டுபிடிப்பதற்கு ஆதரவு வழங்குமாறு காணாமல் போனவர்களின் மகன் இம்ரான் அப்துல் அசீஸ், அரசாங்கத்திடம் கோரியுள்ளார். காணாமல்போன குறித்த இலங்கையர்களை தேடுவதற்காக குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜெட்டாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் அறிவித்துள்ளது.