கன்னட படங்களில் பிசியாக நடித்து வந்த கிஷோர் தமிழில் ‘ஜெயங்கொண்டான்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு வரவேற்பு பெறவே, இவருக்கு அடுத்தடுத்து வில்லன், போலீஸ், குணச்சித்திர வேடங்கள் அமைந்தது. முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் படத்தில் நடித்த கிஷோர், கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தூங்காவனம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
கமல் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கபாலி படத்திலும் கிஷோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். இதில் கிஷோரின் நடிப்பு அனைவராலும் பேசப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை கொடுத்துள்ளனர்.
‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவும் மகளாக தன்ஷிகாவும் நடிக்கிறார்கள். மேலும் கலையரசன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடந்து வருகிறார். அடுத்த கட்டமாக மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.