பஞ்சவர்ண நரியார் சிறுவர் நாடகம் ஞாயிறன்று மேடையேற்றப்படும்

‘பஞ்சவர்ண நரியார்’ சிறுவர் நாடகம், எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் மேடையேறவுள்ளது.

குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய இந்த நாடகத்தை செயல்திறன் அரங்க இயக்கம் தயாரித்துள்ளது. நல்லூர் நாடகத் திருவிழா 2015இல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. பலரதும் வேண்டுகோளுக்கமைய இந்த நாடகத்தை செயல் திறன் அரங்க இயக்கம் சிறுவர்களின் நலன் கருதி இலவசமாக மேடையேற்றத் திட்டமிட்டுள்ளது.

நாவலர் கலாசார மண்டபத்தில் 250 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால். முதல் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதில் பங்குபற்ற விரும்புபவர்கள் தமது பதிவுகளை செயல்திறன் அரங்க இயக்கத்துடன் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

சிறுவர்களின் உடல், உள விருத்திக்கு அரங்கை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் செயற்திட்டமாக செயல்திறன் அரங்க இயக்கம் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாவலர் கலாசார மண்டபத்தில் நாடகங்களை மேடையேற்றத் திட்டமிட்டுள்ளது.

Related Posts