நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய ஆசனத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் அமர்ந்தார்.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு உரித்தான ஆசனங்களில் வேறு எவரேனும் உறுப்பினர்கள் அமர்தல் ஆகாது என்பது பாராளுமன்ற மரபாகும். எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்த உறுப்பினர் சரவணபவன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.
மாவை சேனாதிராஜா எம்.பி.யும் சரவணபவன் எம்.பி.யை அறிவுறுத்தாது அவரும் சரவணபவனுடன் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தார். நேற்றைய அமர்வில் நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத் திலேயே இவ்வாறு சரவணபவன் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.